முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்டார்க் இல்லாதது டில்லிக்கு பின்னடைவா?

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      விளையாட்டு
Mitchell-Starc 2023-12-19

Source: provided

 புதுடில்லி : டில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீதமிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்க் அபாரம்...

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல்ஸ் ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டிகளில் இந்த சீசனில் டில்லி அணிக்காக விளையாடி வருகிறார். 35 வயதாகும் மிட்செல் ஸ்டார்க் இந்த சீசனில் டில்லி அணிக்காக 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சீசனில் டெத் ஓவரில் சிறப்பாக வீசிய ஸ்டார்க் டில்லி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். இன்று (மே.17) முதல் ஐ.பி.எல். போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பங்கேற்பதில் சிக்கல்... 

வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கான போட்டிகளில் விளையாட இருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியன் அசோசியேட் பிரஸ் ஊடகம் தெரிவித்த செய்தியில் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை எனக் கூறியுள்ளார். 

பலவீனம்...

இந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியதும் கவனிக்கத்தக்கது. ஸ்டார்க் இல்லாதது டில்லி அணிக்கு மிகவும் பலவீனமாகவே இருக்கும் என்பதால் பிரேசர் மெக்கர்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மானை மாற்று வீரராகவும் எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து