முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த ஜியா குமாரி, 10-ம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 467-ம், தமிழில் 93 மதிபெண் எடுத்து அசத்தி உள்ளார். இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறுகையில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது: பள்ளியில் கோச்சிங் சிறப்பாக இருந்தது. தினமும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது. 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.  சொந்த ஊர் பீகார். படிப்பிற்காக இங்கு வந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள். அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.  வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம். அப்பாவிற்கு தமிழ் தெரியாது. அம்மாவிற்கு தமிழ் தெரியும்.  

17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது. அதிக மார்க் எடுக்க ஆசிரியர்களும் உதவி செய்தார்கள். பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.  11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும். அப்பா வெல்டிங் வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துதான் நாம் ஏதாவது ஆக வேண்டும் என்றும், படிப்பை முடித்த பிறகே ஊருக்கு போக வேண்டும் என்று அப்பா சொல்லி இருக்கிறார்கள். அம்மா மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்கிறார்கள். பீகாரில் கல்விச்சூழல் குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜியா குமாரியின் வீடியோ வைரலாகிவரும் நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து