முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., மோதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் குழுவை அமைத்தது மத்திய அரசு

சனிக்கிழமை, 17 மே 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பி.க்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குழுவுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பி.க்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தி.மு.க. எம்.பி கனிமொழி, என்.சி.பி. எம்.பி சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களின் பெயர்களை பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பைப்பகிர்ந்துகொண்ட பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற எங்கள் பகிரப்பட்ட செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். வேறுபாடுகளுக்கு அப்பால், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 7 பேர் தலைமையிலான ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மே 22 க்குப் பிறகு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கை வெளிச்சம் போட்டு காட்டவும், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவை ஒருங்கிணைக்கவும் மத்திய அரசு இந்த ராஜதந்திர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து