முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் ஜூன் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5,00,000 ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் மே 16 முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:-

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழக அரசு விருதுகள்  இணைய தளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மே 16 முதல் ஜூன் 16 வரை பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை விண்ணப்பதாரரின் கருத்துரு  தமிழ்-2 ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். 

பக்கம் எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2 இணைப்பு - படிவம் I மற்றும் II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒருபக்க எழுத்து விளக்கம். படிவம் 1 மற்றும் 2 முழுமையாக நிரப்பப்பட வேண்டும் (தமிழில்- மருதம் எழுத்துரு, ஆங்கிலத்தில் - வர்டானா எழுத்துரு) எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணையதளத்தின் மூலம் வருகின்ற ஜூன் 16-ம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து