முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
Velu 2023 05 17

Source: provided

சென்னை : சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பாக கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது அவர் பேசியதாவது; நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்போது 74,021 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் மற்றும் உருவாக்கப்படும் அனைத்து சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தர உறுதி செய்வதற்கு தனியாக ஒரு தர நிர்ணய அமைப்பு தேவை என்ற கருத்தின் அடிப்படையில் தமிழக அரசால்  ஒரு தர நிர்ணய மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. தர நிர்ணய மேலாண்மை அமைப்பின் மூலம்   புதிய முறையில் மூன்று அடுக்கு தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் தர உறுதியினை செயல்படுத்த தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.  .

எனவே தார்க் கலவை மற்றும் சிமெண்ட் கலவை உருவாக்குவதில் தரக்கட்டுப்பாடு பொறியாளர்களுக்கு தான் 100 சதவீதம் பங்கு உள்ளது.  தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் மற்றும் தளப் பொறியாளர்கள் தாரின் படிநிலை தரத்தினை பரிசோதனை செய்ய வேண்டும். தார்க் கலவை உருவாக்கும் போது ஜல்லி, தார் மற்றும் இதர மூலப் பொருட்கள் சரியான அளவில் கலக்கப்படுகிறா? என்பதை தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சாலை சேதமடையாமல் நிலைத்து இருக்கும்.

கான்கிரீட் கலவையில் சிமெண்ட் கல் மற்றும் தண்ணீர் சரியான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் கான்கிரீட்க்கு ஏழு நாட்கள் மற்றும் 28 நாட்களுக்கு உறுதி சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை உரிய பதிவேட்டில் பதியப்பட்டு, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், ஆய்வுக்கு வரும்போது பொறியாளர்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும்.

பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர்களில் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் மற்றும் எடை உரிய முறையில் சோதனை செய்து பதிவேட்டில் பதியப்பட வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து