முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் பிரிவுக்கு 3-வது நபரே காரணம்: ஆர்த்தி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Jayam-Ravi-Arthi 2024-11-15

Source: provided

சென்னை : தங்களது பிரிவுக்கு 3-வது நபரே காரணம் என நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக சுற்ற தொடங்கியதில் இருந்து அவர்களை பற்றிய சர்ச்சைகள் பெரியளவில் வெடித்துள்ளது. இந்த சர்ச்சைக்கு நடுவில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது.  இப்போதுள்ள சூழலில் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது'', என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாடகி கெனிஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்தார் என்பதே உண்மை.

* சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.

* கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில்.

* என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.

* என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.

* எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.

* துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து