முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Accident-1

திருப்பூர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில், நேற்று காரில் ஈரோடு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி, மூத்த மகள் ஹேமிமித்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 வயது சிறுமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து