முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவினுள் மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள் : இஸ்ரேலுக்கு போப் வலியுறுத்தல்

புதன்கிழமை, 21 மே 2025      உலகம்
POPE 2025-04-29

Source: provided

வாடிகன் சிட்டி, : காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார். அப்போது, போரில் பாதிக்கப்பட்ட காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடை விலக்கப்பட்டு அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இத்துடன், காஸா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இதயத்தை நொறுக்கும் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, காஸாவினுள் போதுமான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனும் எனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.  கடந்த மே 8 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த போப் பதினான்காம் லியோ, இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து