முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் சொத்துகளை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு தீவிரம்: அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை: கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பாதுகாப்பதில் தி.மு.க. அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவில் சார்பில் ரூ.55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-  தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோவில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி தருவதிலும், திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பாதுகாப்பதிலும் முனைப்போடு செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த   ரவீஸ்வரர்  கோவில் சார்பில் ரூ.55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தினை  திறந்து வைத்துள்ளோம். இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் திருக்கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் சுவாமி, அம்பாள் சன்னதிகள், மகா மண்டபம், நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் போன்றவற்றை சாலை மட்டத்திலிந்து 8½ அடி உயர்த்திட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இத்திருக்கோவிலின் திருக்குளமானது ரூ.87.90 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் எண்ணற்ற திருப்பணிகளை மேற்கொண்டு ஆன்மிக அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து