முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: ராகுல் காந்தி உறுதி

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
Rahul-in-Kashmir-2025-05-24

ஸ்ரீநகர், பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். காலையில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பூஞ்ச் சென்றார். அங்கு கிறிஸ்ட் பள்ளிக்குச் சென்ற அவர் பாகிஸ்தான் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார்.

தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், “நான் மக்களிடம் பேசி அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முயற்சித்தேன். அவர்கள் என்னிடம் 2-3 முக்கியமான பிரச்சினைகளைக் கூறி அவை குறித்து கேள்வி எழுப்புமாறு தெரிவித்துள்ளனர். நான் அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்.” என்று தெரிவித்தார்.

பஹல்காமில் ஏப்.22-ம் தேதி 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கவாத தாக்குதலுக்கு பின்பு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஏப்.25-ம் தேதி பஹல்காம் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணைநிலை நிலை ஆளுநர், ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்தும் பேசினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து