முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியை இன்று அறிவிக்கிறது பி.சி.சி.ஐ. தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பெற வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவிக்கிறது. இதில் சாய் 

சுதர்சன், அர்ஷ்தீப் சிங் இடம்பெற வாயப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் தொடர்....

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது.

இன்று அறிவிப்பு...

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது . இது தொடர்பாக பி.சி.சி.ஐ. இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. ஆலோசனைக்கு பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. 

16 முதல் 17 வீரர்கள்...

இதற்கிடையே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவிக்கு சுப்மன் கில், பும்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 16 முதல் 17 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முகமது சமி இல்லை...

இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, இங்கிலாந்து தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும் நீண்ட நேரம் பந்து வீசும் அளவுக்கு அவர் முழுமையாக குணமடையவில்லை என்றும், எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து