முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி..! கருத்து கணிப்பில் புதிய தகவல்

திங்கட்கிழமை, 26 மே 2025      அரசியல்
BJP 2023-11-05

பெங்களூரு, கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

ஐதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான‌ காங்கிரஸ் ஆட்சி 48.4 சதவீதம் பேர் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு சித்தராமையா முதலிடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் டி.கே.சிவகுமார், எடியூரப்பா, விஜயேந்திரா (எடியூரப்பாவின் மகன்), பசவராஜ் பொம்மை ஆகியோர் உள்ளனர்.

இதேபோல அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 58% பேர் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். மொத்தமுள்ள 224 இடங்களில் பா.ஜ.க. 136 முதல் 159 இடங்களை கைப்பற்றும். இதன் மூலம் தனி பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. தனித்து ஆட்சியை அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

காங்கிரஸுக்கு 62 முதல் 82 இடங்கள் கிடைக்கும். மஜதவின் வாக்கு சதவீதம் 18-ல் இருந்து 6 சதவீதமாக குறையும். இதன் மூலம் அக்கட்சி 3 முதல் 6 இடங்களிலேயே வெற்றிப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து