முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் அடுத்த கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவை: பிரதமர் நரேந்தி மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      இந்தியா
PM-Modi-1-2025-05-27

காந்திநகர், ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் 4வது பொருளாதார நாடானது இந்தியா. இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். 1947ல் காஷ்மீரின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது, அதை திரும்ப பெறும்வரை நமது படைகளை திரும்பப் பெறக்கூடாது என்றார் வல்லபாய் படேல். அப்போது அவர் கூறியதை யாரும் கேட்கவில்லை. 

பாகிஸ்தானால் நேரடியாக போரிட்டு, இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதம் மறைமுகப் போர் அல்ல, மாறாக வேண்டுமென்றே செய்யப்படும் போர் உத்தி, இந்தியா அதற்கேற்ப பதிலளிக்கும்.

மே 6 அன்று இரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.   இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்ற போதெல்லாம், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானை தோற்கடித்ததாகவும், இது அண்டை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை அடுத்து மக்கள் கணக்கெடுக்க வேண்டும். எவ்வளவு லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கமாட்டோம் என வியாபாரிகள் கூற வேண்டும். துரதிர்ஷடவசமாக விநாயகர் சிலைகள் கூட வெளிநாட்டில் இருந்துதான் வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து