முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கொளத்தூர், பழனி மற்றும் நெல்லையில் ரூ. 22.61 கோடி மதிப்பில் 3 முதியோர் காப்பகங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சென்னை : சென்னை கொளத்தூர், பழனி உள்ளிட்ட 3 இடங்ளில் ரூ. 22.61 கோடி மதிப்பிலான புதிய முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான (முதியோர் காப்பகங்கள்) அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். கொளத்தூரில் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

6 நிகழ்ச்சிகளில்.... 

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முதலாவது நிகழ்ச்சியாக ராஜாஜி நகரில் முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதியில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் தங்கும் உறைவிடம், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக ரூ.8.48 கோடி செலவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக ரூ.5.25 கோடி செலவிலும் முதியோர் தங்கும் இடத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 22.61 கோடி மதிப்பீட்டில் இந்த 3 உறைவிடங்களுக்கான (முதியோர் காப்பகங்கள்) பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகள்...

இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.

பணி நியமன ஆணை...

இந்த விழாவில் மாற்றுத் திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவர் முதல்வரை பாராட்டி பாடல் ஒன்றை பாடினார். இதைத்தொடர்ந்து வி.கே.எம். காலனியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 350 மாணவ-மாணவிகளுக்கு தையல் எந்திரம் 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாணவர்களுக்கு பாராட்டு....

இதைத் தொடர்ந்து ரூ. 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 318 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராட்டினார். இதையடுத்து பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரன் நகர் 80 அடி சாலையில் புதுப்பிக்கப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

முதல்வருக்கு வரவேற்பு...

கொளத்தூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்று பெண்கள் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்து கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளி நாகராஜன், மண்டல தலைவர் சரிதா, நிர்வாகிகள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து