முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை: ரிக்கல்டான்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

ஜெய்ப்பூர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

தவறவிட்டது...

ஐ.பி.எல். தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான  போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தவறவிட்டது. மும்பை அணி 14 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

எச்சரிக்கை...

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கான எச்சரிக்கை எனவும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி எங்களைவிட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இந்த போட்டியில் தோற்றுவிட்டதால், எல்லாம் முடிந்துவிட்டது என்றாகாது. 

மீண்டு வருவோம்...

உண்மையைக் கூறவேண்டுமென்றால், மும்பை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் திறமை எங்களுக்கு இருக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் வலுவாக மீண்டு வருவோம். நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. 

வரலாறு...

200 அல்லது 220 ரன்கள் எடுத்திருந்தால், எதிரணிக்கு சவால் அளிக்கும் விதமாக எங்களது பந்துவீச்சாளர்கள் செயல்பட்டிருப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து அதிக முறை வெற்றி பெற்றதாகவே வரலாறு கூறுகிறது. முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகளை இழந்ததால், எங்களால் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடியவில்லை என்றார். வருகிற மே 30 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து