முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

புதுடெல்லி, 5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. இதை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா  வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த ரபேல் போர் விமானம் 4 ம் தலைமுறையை சேர்ந்தது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன. துருக்கி 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவும் 5-ம் தலைமுறை விமானத்தை உருவாக்க முடிவு செய்தது. அதன்படி  5 -ம் தலைமுறை விமானத்தை ஏ.எம்.சி.ஏ. திட்டம் மூலம் தயாரிக்க முடிவு செய்தது.

5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5-ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5-ம் தலைமுறை போர் விமானம், 2035-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து