முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகக்கவசம் கட்டாயம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Mask 2025-01-06

புதுச்சேரி, கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்தது. இது 2023-ம் ஆண்டு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை சந்தித்தது. இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசில் உருமாற்றங்கள் ஏற்பட்டு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால், அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இந்தியாவிலும் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மே 26-ம் தேதி கணக்கின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,011 ஆக உள்ளது.இந்தநிலையில், முகக்கவசம் கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் புதுச்சேரியில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து