முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு

செவ்வாய்க்கிழமை, 27 மே 2025      தமிழகம்
Rain 2024-12-02

Source: provided

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 256 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் ஊட்டி-மஞ்சூர், இத்தலார், எடக்காடு, ஊட்டி- கூடலுார் சாலை மற்றும் பந்தலுார் பகுதிகளில் நுாறாண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் துறையினர் இது போன்ற மரங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குந்தா அணை முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. வினாடிக்கு, 400 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இரண்டு மதகுகளில் தலா , 200 கன அடி வீதம் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக பெரும்பாலான கிராமங்களில் மின் தடை தொடர்வதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த சில நாட்களாக மழை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்ல முடியவில்லை. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

சுற்றுலா தலங்கள் அனைத்து தற்காலிகமாக மூடப்பட்டதால் வெறிச்சோடிய நிலையில் அப்பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தவர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். கடும் குளிர் வாட்டுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து