முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98.26 சதவீதம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
RBI- 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெற்றதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2023, மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது.அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், அது இன்னும்சட்டப்படி செல்லும்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சி இருந்தபோதிலும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மொத்த நாணய மதிப்பில் 86 சதவிகிதமும், மொத்த அளவில் 40.9 சதவீதம் பங்களிப்பும் கொண்டு ரூ.500 நோட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. கள்ளநோட்டை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து