முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் விபத்து - 9 பேர் பலி

புதன்கிழமை, 4 ஜூன் 2025      இந்தியா
Accident-1

ஜபுவா, மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றப்பட்ட லாரி, வேன் மீது கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜபுவா மாவட்டத்தின் மேக்நகர் தாலுகாவுக்கு உட்பட்ட சஞ்சேலி எனும் இடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாவ்புரா என்ற பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், ஷிவ்கர் மஹுதா என்ற தங்கள் கிராமத்துக்கு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். 

அவர்கள் வேன், அதிகாலை 2.30 மணி அளவில் சஞ்சேலி ரயில் மேம்பாலம் அருகே வந்தபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்து வேன் மீது விழுந்துள்ளது. இதில், வேனில் பயணித்த 11 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள். ஜபுவா காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோச்சன் சுக்லா இதனை தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் முகேஷ் கபேத் (40), சவ்லி கபேத் (35), வினோத் கபேத் (16), பயல் கபேத் (12), மதி பமானியா (38), விஜய் பமானியா (14), காந்தா பமானியா (14), ராகினி (9) மற்றும் அக்லி பர்மர் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜபுவா காவல் கண்காணிப்பாளர், உடல்கள் பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகவும் தாண்ட்லா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து