முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு சம்பவம்: கர்நாடக முதல்வரின் செயலாளர் டிஸ்மிஸ்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      இந்தியா
RCB-2025-06-05

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார். முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்.

பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை பெங்களூரு வென்றதை தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெங்களூரு அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக அம்மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., தலைவர் ஹேமந்த் நிம்பல்கர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதே போன்று முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் நீக்கப்பட்டுள்ளார். மாநில ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கும் அவர், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து