முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு கூட்ட நெரிசல்: போலீஸ் அறிக்கையால் சர்ச்சை

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      இந்தியா
Bengaluru-RCB-2025-06-05

பெங்களூரு,  பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், இயற்கைக்கு மாறான வகையில் 11 பேர் மரணமடைந்ததாக தனித்தனியாக போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.  

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்.சி.பி.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், 11 பேரின் மரணத்தையும் இயற்கைக்கு மாறான மரணம் என்று தனித்தனியாக பெங்களூரு நகர போலீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

ஒருவேளை பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சம்பவம் நடந்த பகுதி எந்த நீதிமன்ற சரகத்துக்குள் வருகிறதோ, சம்பந்தப்பட்ட அந்த நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை பற்றிய தகவலை போலீஸ் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல் வழக்கு விசாரணையின் அத்தனை நகர்வுகளையும் நீதிமன்றத்துக்கு அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால், இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீஸ் அறிக்கையில் பதிவு செய்தால், அந்த வழக்கில் குற்றவியல் விசாரணை இருக்காது. எனவே, சம்பவப் பகுதிக்கான தாசில்தார் விசாரணையை மேற்பார்வை செய்தாலே போதுமானது. இந்நிலையில், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து