முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரடி பி.இ., பி.டெக். படிப்புக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      தமிழகம்
Exam

சென்னை, பொறியியல் பாடத்தில் டிப்ளமா படித்தவர்கள் மற்றும் பி.எஸ்.சி. பட்டதாரிகள் பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (ஜூன் 6) தொடங்குகிறது.

இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் (கணிதத்தை குறைந்தபட்சம் துணை பாடமாக படித்திருக்க வேண்டும்) ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கு டிப்ளமா முடித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.500. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினராக இருந்தால் ரூ.250. பதிவுக்கட்டணத்தை விண்ணப்பிக்கும்போதே ஆன்லைனில் செலுத்திவிடலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாத மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேவை மையத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து