முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 4,866-ஐ தாண்டியது 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      இந்தியா
coronavirus

Source: provided

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று முன்தினம் (ஜூன் 04) ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் 112 பேரும், தமிழகத்தில் 213 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர். மஹாராஷ்டிராவை சேர்ந்த 3 பேரும், டில்லி மற்றும் கர்நாடகாவில் தலா இரண்டு பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த ஏழு பேரில் ஆறு பேர் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் அவதி அடைந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து