முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபா தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் : ம.நீ.ம. தலைவர் கமலஹாசனும் தாக்கல் செய்தார்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      தமிழகம்
CM-1 2025-06-06

Source: provided

பேனர் செய்தி....

சென்னை : மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று  தாக்கல் செய்தனர்.

ஜூன் 19-ல் தேர்தல்...

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அ.தி.மு.க. எம்பி சந்திரசேகரன், ம.தி.மு.க. எம்.பி. வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

3 பேர் போட்டி...

இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர். அப்போது, கங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மமக தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், தி.மு.க. எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

கமல்ஹாசன் தாக்கல்...

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பேரவை கூடுதல் செயலாளரிடம் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து