முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      தமிழகம்
Amitsha-1 2025-06-08

Source: provided

மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார்.

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வந்துள்ளார். அவர் நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷாவை மதுரை ஆதீனம் சால்வை அணிவித்து வரவேற்று புத்தகம் மற்றும் மனுவை வழங்கினார்.

பின்னர் மதுரை ஆதீனம் கூறுகையில், "பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்போதும் அவரை சந்தித்து பேசினேன். இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். அவரை கோயில் முன்பு வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன். அதில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்கவும், மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து