முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் சாலை விபத்து: உயிர் தப்பினார் தேஜஸ்வி யாதவ்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா : பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பீகாரின் மாதேபுராவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், அங்கிருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் ஆகியோருடன் தேசிய நெடுஞ்சாலை 22 இல் திரும்பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் நேற்று (ஜூன் 7) அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்துவதற்காக அவரது கார் நின்றபோது, வேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு வாகனங்களில் மோதியது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நாங்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மாதேபுராவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். வைஷாலியில் தேநீர் அருந்துவதற்காக நின்றோம். லாரி ஒன்று சமநிலையை இழந்து இரண்டு முதல் மூன்று வாகனங்களில் மோதியதைக் கண்டேன். அங்கே எனது பாதுகாப்புப் படையினர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது லாரி மோதியதால் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். சற்று முன்னதாக லாரி சமநிலையை இழந்திருந்தால், அது எங்கள் மீதும் மோதியிருக்கலாம்.” என தெரிவித்தார்.

காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் வைஷாலி சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷ்யாம்நந்தன் பிரசாத் தெரிவித்தார். விபத்து நிகழ்ந்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை, சராய் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து