முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, செயல்பாடுகள் குறித்து 4 துறைகளின் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை : முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
CM-2 2025-06-09

Source: provided

சென்னை : சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 துறைகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் அறிவுறுத்தல்...

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து