முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயதானவர்களை குறிவைத்து கொலை, கொள்ளைகள் அதிகரிப்பு: மதுரை ஐகோர்ட் கிளை வேதனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்கள், மருத்துவமனைகளில் முதியவர்களை உறவினர்கள் தனியே விட்டுச்செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.  இவ்வாறு தனித்து விடப்படும் முதியவர்கள் வாழ்வாதாரத்துக்காக யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற முதியவர்களை பாதுகாக்க மாவட்டங்களில் முதியோர் மையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட முதியவர்கள் பாதுகாக்கப்படும் வகையில், தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “சமீப காலமாக ஊரகப் பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சில மையங்களிலும், படுக்கை, போர்வை, தண்ணீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. முதியவர்களை பாதுகாப்பது அரசின் கடமை,” என்றனர்.

தொடர்ந்து தமிழகத்தில் தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து