முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: லாஸ் ஏஞ்சல்ஸில் கடற்படை வீரர்களை களமிறக்கிய ட்ரம்ப்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      உலகம்
Trump

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரம் 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் அங்கு சுமார் 700 கடற்படை வீரர்களை களமிறக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய படையைச் சேர்ந்த வீரர்களுடன் தற்போது ‘யுஎஸ் மரைன்ஸ்’ என்ற பாதுகாப்புப் படையின் கடற்படை பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு கரோலினா முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 4-வது நாளாக லாஸ் ஏஞ்சல்ஸ் பற்றி எரிகிறது.

சக்திவாய்ந்த யுஎஸ் மரைன்ஸ் - யுஎஸ் மரைன்ஸ் என்பது அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவாக இருந்தாலும் கூட நிலத்தில் ஏற்படும் அதிதீவிரமான கலவரங்களைக் கட்டுப்படுத்தவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் வீரர்கள் மிகவும் திறமையானவர்களாக அறியப்படுகின்றனர். மூர்க்கத்தனமான கலவரங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் 4-வது நாளாக கலவரம் நடந்து வரும் நிலையில், அந்தக் கலவரத்தை ஒடுக்க ட்ரம்ப் எடுத்த முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து