முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோய் கிருமி கடத்தியதாக புகார்: சீன நபர் அமெரிக்காவில் கைது

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      உலகம்
Jail

Source: provided

வாஷிங்டன்: நோய் கிருமி கடத்தியதாக, வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானியை அமெரிக்காவில் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

சீனாவைச் சேர்ந்தவர் செங்சுவான் ஹான். இவர் வுஹானில் உள்ள ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் அமெரிக்காவிற்கு நோய் கிருமி கடத்தியதாக, டெட்ராய்ட் விமான நிலையத்தில் எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து எப்.பி.ஐ., இயக்குனர் காஷ் படேல் கூறியதாவது: அமெரிக்காவிற்குள் உயிரியல் பொருட்களை கடத்தியதற்காகவும், அதிகாரிகளிடம் பொய் சொன்னதற்காகவும் சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் சீன மக்கள் குடியரசின் குடிமகனும், சீனாவின் வுஹானில் முனைவர் பட்ட மாணவருமான செங்சுவான் ஹான் ஆவார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு முகவரியிடப்பட்ட வட்டப்புழுக்கள் தொடர்பான உயிரியல் பொருள் கொண்ட நான்கு பொட்டலங்களை ஹான் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளார். டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்திற்கு வந்தவுடன், ஹான் கைது செய்யப்பட்டார். அவர் எப்.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையின் போது தவறை ஒப்புக்கொண்டார். நோய்க்கிருமி கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, பயிர்களை அழிக்கக்கூடிய நோய் கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தியதாக யுன்கிங் ஜியான், ஸுன்யோங் லியு ஆகிய இரண்டு சீனர்களை, அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து