முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      இந்தியா
Naxalites 2024-11-16

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், ஜார்க்கண்ட் - ஒடிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ஒடிசா சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுந்தர்கர் மாவட்டம் ரூர்கிலா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் சத்யபின் குமார் சிங் (வயது 34) உயிரிழந்தார். உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்தவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து