முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-58

Source: provided

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் மற்றும் மேக்கேயில் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்து அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் சிங், தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் பட்டேல், உதவ் மோகன், அமன் சௌகான்.

உழைத்தால் வெற்றி: கில்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது.  இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.

தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம். நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார்.

5-வது டெஸ்ட் முக்கியம்: துருவ்

வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும். ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன். களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது. இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார். துருவ் ஜுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் அணியில் இணையவிருக்கிறார். ஐ.சி.சி.யின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். கடந்த 2019-இல் ஸ்பாட்பிக்ஸில் ஈடுபட்ட இவருக்கு 2022-இல் தடைவிதிக்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை உட்கொண்டதால் இவருக்கு 2019-இல் 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டிகளில் 92, 81, 49 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தார். கடினமாக உழைத்து மீண்டும் கம்பேக் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கு முன்னேறியது பாக்.

இங்கிலாந்தில் முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் ஆட்டத்திலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக ரெய்னா, தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தது.  ஆனால், இந்திய அணியின் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவை மதித்து போட்டியை கைவிடுவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணி விளையாடத் தயாராக இருந்ததால், அவர்கள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து