முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பா.ஜ.க.வில் குஷ்புக்கு முக்கிய பதவி மாநில துணைத்தலைவராக நியமனம்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      அரசியல்
kusboo 2023-07-20

சென்னை, பா.ஜ.க. மாநில துணைத்தலைவராக குஷ்புவை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலர்களாக கேசவ விநாயகம், ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, டாக்டர் கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலச் செயலர்களாக கராத்தே தியாகராஜன், கே. வெங்கடேசன் உள்ளிட்ட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வி.பி. துரைசாமி, கரு நாகராஜன் உள்ளிட்டோரும் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அமைப்பாளராக கே.டி. ராகவன், எம். நாச்சியப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து