முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      இந்தியா
Aarmy 2025-03-31

Source: provided

திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டீஷ் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்ட எப் 35 போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதையும், மீண்டும் போர்க்கப்பலுக்கு செல்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையும் விமானி உணர்ந்தார்.

வேறு வழியில்லாத சூழலில், அருகேயுள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு அனுமதி கோரினார். இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, உடனடியாக அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தற்போது எரிபொருள் நிரப்ப மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த விமானம், வளைகுடா பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அமைதியற்ற சூழலை கருத்தில் கொண்டும், கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து