முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். 

உள்ளாட்சி நிறுவனங்களில் 13,988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மெரினா, பெசன்ட் நகர், ஆகிய பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் கடல் நீரைத் தொட்டு கால்பதித்து மகிழத்தக்க வகையில் இரண்டு அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட சிறப்பு ஆணையம், விபத்து நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கியமை, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில விருதான "ஹெலன் கெல்லர்" விருது வழங்குதல், ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், முனைவர் பட்டத்திற்குப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு துறைத் தேர்விலிருந்து விலக்கு, வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடை ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.1,500 ஆக உயர்த்தியது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 என்பது ரூ.2,000 ஆக உயர்த்தியமை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கியது உட்பட அனைத்துச் சலுகைகளுக்கும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் எனும் பெயரைச் சூட்டி, அவர்கள் மனதிலிருந்த குறைகளை அகற்றியவர் என்பதை நினைவுகூரும் இந்த வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பொருளாதார நிலைகள் உயரும் வகையில் இதுவரை எந்த அரசும் செய்திடாத பல புதிய சலுகைகளை வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் சேர்த்துள்ளார். 

முதல்வர் வழங்கிய எண்ணற்ற சலுகைகளை நினைந்து மகிழ்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்று கூடி வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய நன்றி அறிவிப்புப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகளின் பாராட்டு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.00 மணியளவில் கோலாகலமாக நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து