முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: பதுங்கு குழியில் ஈரான் உயர் தலைவர் காமேனி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      உலகம்
Iran 2024-03-17

Source: provided

தெக்ரான் : ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது. காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து