முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      இந்தியா
Raj-Thackeray 2025-07-05

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. 

தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பா.ஜ.க. மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது. இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ். கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு ஜூலை 5 ஆம் தேதியான நேற்று பேரணி நடத்துவதாக அறிவித்தது. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பார்த்து பயந்த பா.ஜ.க. மகாயுதி அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற  இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றினார். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஒன்றாக இணைந்துள்ளனர்.

இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவில் ஒருவர் வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் அவரின் காதுகளுக்குக் கீழே அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள்.  குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்'' என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து