முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமான் மாநாடு சாதி வெறியின் எச்சம்: வி.சி.க. கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Seaman 2024-02-17

சென்னை, பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச் சொல்லுவதும், குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம் என்று வன்னி அரசு  தெரிவித்துள்ளார்.

வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுவதையொட்டி ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆரியக்கோட்பாடான குலக்கல்வித்திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் நடத்தியுள்ளார். பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக் கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான். 

மாடுகளை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ். கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன. பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச் சொல்லுவதும், குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம். அது சரி, மாடுகளை மேய்க்கவும், பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா? அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து