முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம்: ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Ilayaraja-2024-10-27

Source: provided

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது..’ பாடல் இடம்பெற்றுள்ளது. என்னுடைய அனுமதியில்லாமல் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் பாடலை பயன்படுத்தியுள்ளனர். 

இது காப்புரிமை மீறிய செயல். உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் முறையீடு செய்தார். இதையடுத்து, வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து