முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு கல்வி மோகத்தில் கடனில் மூழ்க வேண்டாம் தலைமை நீதிபதி கவாய் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Air

Source: provided

ஐதராபாத்: வெளிநாட்டு கல்வி, பட்டங்கள் மோகத்தில் கடனில் மூழ்க வேண்டாம் என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுரை வழங்கியுள்ளார்.

தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

நீதிபதி கவாய் தனது உரையில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் நுழையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். சட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு பட்டங்களுக்காக கடனில் மூழ்க வேண்டாம் என்று எச்சரித்தார். இந்தியா தரமான சட்டக் கல்வியை வழங்குகிறது, வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை என்றும், ஒருவரின் திறமை அவர்களின் பணி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். எனவே வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் மாணவர்களை அறிவுறுத்தினார்.

மேலும் தற்காலத்தில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களையும் கவாய் எடுத்துரைத்தார். இந்தியா பல்வேறு சட்ட சவால்களை எதிர்கொள்கிறது என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் உள்ளவர்கள் அனைவரும் கவனமாக இருப்பது முக்கியம் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து