முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      சினிமா
Freedom 2025-07-15

Source: provided

சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்போது, இந்திய முன்னாள் பிரதமர் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்படுகிறார். இதனால், சமீபத்தில் இலங்கையில் இருந்து வந்தவர்களை விசாரிப்பதற்காக வேலூர் கோட்டைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் பல வருடங்களாக கொடுமைகளை அனுபவிக்கும் அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள், ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்ய, அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படந்தான் ஃப்ரீடம்’. 

ஈழத்தமிழராக நடித்திருக்கும் சசிகுமார், வசன உச்சரிப்பு உடல் மொழியில் சிறப்பாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜிப்ரானின் இசையும் உதயகுமாரின் ஒளிப்பதிவும் அருமை.  இலங்கையில் அனுபவிக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் பலர் இலங்கையை விட அதீத கொடுமையை இங்கு அனுபவித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சத்யசிவா, உணர்வுப்பூர்வமான படைப்பாக மட்டும் இன்றி விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து