முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோவிலில் கடும் நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      இந்தியா
Manasadevi 2025-07-27

Source: provided

ஹரித்வார் : உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் மின்சாரம் தாக்கிதயதாக தகவல் பரவியதையடுத்து பக்தர்கள் அங்கிருந்து இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஓட முயற்சித்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக தகவல் பரவியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மின்கம்பத்தில் உண்மையிலேயே மின்கசிவு ஏற்பட்டதா அல்லது யாரேனும் வேண்டுமென்றே வதந்தி பரப்பினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து