முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தோல்விகளுக்கு தேர்தல் ஆணையமே காரணம்: ராகுல் காந்தி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      இந்தியா
Rahul 2024-06-10

Source: provided

புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்விகளுக்கு காரணம். காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுங்கள். சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும்.

கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும்போது நீங்களே உங்களை சந்தேகிக்கலாம். அப்போது நீங்கள் அவுட் ஆவது உங்கள் தவறல்ல, மாறாக நடுவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதே காரணம் என்பதை கண்டறியலாம். அதைப்போலவே, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது. அதை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் காரணமாகவே 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம்.

இந்த நாடு ஒரு கோவில் போல. அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம். ஆனால் பிரசாதம் யாருக்கு, என்ன கிடைக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து