முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர்.  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை மற்றும் குழந்தைகள் தொடர்பான வசதிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதையும் உள்ளடக்கியதாகும். பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, தீ தடுப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள், மின் இணைப்பு போன்றவை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை, விபத்து உள்ளிட்ட சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் அதற்காக நியமிக்கப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அதிகாரியிடம் தெரிவிக்கப்பட வேண்டும். தாமதம், அலட்சியம் அல்லது நடவடிக்கை எடுக்கத்தவறிய சம்பவங்களில் கடுமையான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து