முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை தீர்த்தத்தால் சோழீஸ்வரருக்கு பிரதமர் நரேந்திர மோடி அபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Modi-3 2025-07-27

Source: provided

அரியலூர் : முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு  கங்கை தீர்த்தம் கொண்டு வந்த பிரதமர் மோடி, சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார்.

தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.

திருச்சியில் உள்ள ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி நேற்று (ஜூலை 27) கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த பா.ஜ.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி சென்றார். சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வரை பிரதமர் மோடி ரோடு ஷோவில் வழியெங்கும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.

அப்போது பிரதமர் மோடி வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார். காரின் கதவை திறந்து, நின்றவாறு பிரதமர் மோடி சாலையில் திரண்டிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார். முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு பிரதமர் மோடி, சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார். ஓதுவார்கள் திருவாசகம் பாட, தீபாராதனை காட்டி தமிழில் வழிபாடு நடத்தினார். புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில், பிரதமர் மோடி கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து