Idhayam Matrimony

உலகக்கோப்பை செஸ் தொடர்: 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      விளையாட்டு
Divya-Deshmukh 2025-07-28

Source: provided

பதுமி : ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை செஸ் பைனலில், சக நாட்டு வீராங்கனையான ஹம்பியை வீழ்த்தி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை செஸ்... 

ஜார்ஜியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். நாக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா மற்றும் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறினர். அதுமட்டுமில்லாமல், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றனர். இருவரும் மோதிய முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தன. டை பிரேக்கர் போட்டி இன்று நடந்தது. இந்தப்போட்டியில், ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.  உலகக் கோப்பை செஸ் தொடரில் இரண்டு இந்திய செஸ் வீராங்கனைகள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து...

இந்த நிலையில், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக் வென்றிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக வாழ்த்துகள். இது பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். கோனெரு ஹம்பி இந்த தொடர் முழுவதும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். இரு வீராங்கனைகளின் எதிர்காலத்துக்காக வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து