Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று (ஜூலை 28) நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள தயங்குவது குறித்து, இந்திய தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:  எந்த ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நிராகரிக்க கூடாது.  ஆவணங்களில் எதுவும் பிரச்னை இருந்தால் தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.  ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து