Idhayam Matrimony

ரிஷப் பண்ட்க்கு பதிலாக இந்திய அணியில் தமிழக வீரர் சேர்ப்பு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      விளையாட்டு
Rishabh-Pant--------

Source: provided

மான் செஸ்டர் : காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள ரிஷப் பண்ட்க்கு பதிலாக தமிழக வீரர் இந்திய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.

டிராவில்... 

மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.

பண்ட் அரைசதம்... 

ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயரிடப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார் .

ஜெகதீசன்...

இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து