Idhayam Matrimony

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கூலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டத்தை மீறும் குறிப்பிட்ட இணையதளங்களில் திருட்டுத்தனமாக கூலி படத்தை வெளியிடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று இந்தியா எங்கிலும் 36 இணையதள சேவை வழங்குதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கூலி படத்தை இணையத்தில் முறைகேடாக வெளியிடுவதற்கான தடை கோருவது தொடர்பாக, படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது சட்டத்தை மீறி திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இணையதளங்களை முடக்குவதுடன், இனி வருங்காலத்தில் இதுபோன்ற இணையதளங்கள் ஏதேனும் வருமாயின் அவற்றையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகைய முறைகேடான நடவடிக்கைகள் தடுக்கப்படாவிட்டால் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து